தமிழ்நாடு

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர், செந்துறை பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே அரியலூர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, கொரோனா தொற்று இல்லை என ​தெரியவந்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தபோது செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரின் உறவினர்கள் பத்து பேரும் மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்