தமிழ்நாடு

மதுவினால் ஏற்பட்ட தகராறு - மனமுடைந்த இளைஞர் செய்த செயல்

தந்தி டிவி

வாணாபுரம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர், தனது நண்பர்களான செல்வம், பிரகாஷ் ஆகியோருடன் கடந்த சனிக்கிழமை மது குடிக்க சென்றார். அங்கு மூவருக்கும் பிரச்னை ஏற்பட்டதில், மனமுடைந்த செல்வம், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு, செல்வத்தின் உடல், சொந்த கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அவருடைய உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல், உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படாத வண்ணம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம்ஏற்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்