தமிழ்நாடு

சிகரெட் கேட்டு பெட்டிக்கடையில் தகராறு-பணம் கேட்டதால் பெட்ரோல் குண்டு வீச்சு- அதிரடி காட்டிய போலீஸ்

தந்தி டிவி

#thanthitv #petrolbomb #bomb #shop

சிகரெட் கேட்டு பெட்டிக்கடையில் தகராறு-பணம் கேட்டதால் பெட்ரோல் குண்டு வீச்சு- அதிரடி காட்டிய போலீஸ்

கோவை சேரன் மாநகர் வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. நேற்று மாலை சில இளைஞர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் வாங்கி உள்ளனர். ஆனால், சிகரெட்டுக்கான பணத்தை கொடுக்காமல் கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள் இரவு மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டை வீசினர். ஆனால் தவறுதலாக பெட்ரோல் குண்டு அருகே இருந்த ஹோட்டல் மீது விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பெட்ரோல் குண்டை வீசிய வரதராஜன் என்பவரை மடக்கி பிடித்தனர். அப்போது, பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, வரதராஜனின் நண்பர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி