தமிழ்நாடு

உலகமே வியக்க தமிழ் நிலத்தில் கிடைத்த பொக்கிஷம்! - ஆராய்ச்சியாளர்களை மிரளவிட்ட தமிழர்கள்

தந்தி டிவி

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பதின் வரலாற்று ஆய்வு பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

இதற்கெல்லாம் ஆதாரமாக அள்ள அள்ள கொடுக்கும் அமுதசுரபியாய் அமைந்தது கீழடியில் அகழாய்வு.

சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ, ஹரப்பாவை பின்னுக்கு தள்ளக்கூடியது வைகை நதி நாகரிகம் என்று அறைகூவல் விடுத்தது கீழடி அகழாய்வு முடிவுகள்...

தமிழகத்தில் தோண்ட தோண்ட அகழ்வாய்வில் கிடைக்கும் பொக்கிஷங்களால் தமிழர்களின் பெருமையை உலகம் அறிய, முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று சஸ்பென்ஸ் வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

இரும்பின் தொன்மை நூல் வெளியிட்டு விழாவில் அந்த சஸ்பென்ஸை உடைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படும் என்றதோடு, அதற்கான அறிவியல் ஆதாரத்தையும் தெரிவித்தார்.

கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் இரும்பு பொருட்கள் கிடைத்த வேளையில், அந்த வரலாற்று பொக்கிஷங்களின் ஆய்வு முடிவை விவரித்தது ஏ.வி.

இந்த ஆய்வு முடிவுகள், சிந்து சமவெளி நாகரித்தை கடந்து ஒரு தனி நாகரிகமே இருந்தது என்பதை காட்டுவதாக ஆச்சரியம் தெரிவித்தார் இந்திய தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குனர் ராகேஷ் திவாரி

(male dubbing இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க சில நூற்றாண்டுகள் பிடித்திருக்கலாம். தமிழகத்தில் இருந்து வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவை நாங்க எதிர்பார்க்கல... ஆனா, உறுதியா நாட்டில் எங்கும் இல்லாது. இங்கேயே முதல் முறை இந்த தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என காட்டுகிறது)

5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் கொண்டிருந்த தொழில்நுட்பத்தை விளக்கினார் தொல்லியல் துறை செயலாளர் உதயச்சந்திரன்....

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து, இரும்பை உருக்கி ஆயுதமாக பயன்படுத்திய இனம் தமிழினம் என்பது உறுதியாகியிருக்கிறது...

இதை சுட்டிக்காட்டி, உலகின் மூத்த குடி தமிழ்குடி என்பதை மெய்பிக்க இன்னும் இந்த உலகம் வியக்கும் பொக்கிஷங்கள் தமிழ் நிலத்தில் கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?