தமிழ்நாடு

ஆரணி : தொடர்மழையால் நிரம்பிய சுரங்கப்பாதை - போக்குவரத்து பாதிப்பு

ஆரணி அருகே, அம்மாபாளையம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாபாளையம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், கண்ணமங்கலம், மற்றும் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டுமானால் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அம்மாபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டிக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்