தமிழ்நாடு

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள்

தந்தி டிவி

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள் - 3 மணி நேரம் படாத பாடு பட்ட பயணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்...

3 மற்றும் 4வது நடைமேடையில் சென்னை நோக்கி செல்லும் வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் அடுத்தடுத்த நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்... காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் முதற்கொண்டு 7. 20 வரை பல்வேறு ரயில்கள் ரயில் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில் தாமதத்தால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்