தமிழ்நாடு

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை - பொதுமக்கள் சாலை மறியல்

கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை விலங்கடுபக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க பல முறை மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு , ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்த பைப்புகளையும், மின் சாதன பொருட்களையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்