விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்கும் போது லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஷ்ணுபரன் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.