கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதன்படி, மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர மளிகை கடைகள், காய்கறிகடைகள், உட்பட அனைத்தும் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் இருந்து ஈரோடு வழியாக தமிழகம் வருவோர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காட்ட வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளார்.