தமிழ்நாடு

பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா..?

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தந்தி டிவி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் திறனை மேம்படுத்தும் நோக்கில் 16,000 பகுதிநேர ஆசிரியர்கள் 7,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பணிக்கால உயிரிழப்பு மற்றும் ஊதிய குறைவால் பலர் வெளியேறியதால், தற்போது 12,500 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால், தங்களையும் பணிநிரந்தரம் செய்ய கோரி, முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தங்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமா? என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேபோன்று, வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதினால் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது, 17-பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், விளையாட்டிற்கு தனி பாட புத்தகத்தை வெளியிட வேண்டுமென்பது, உடற்கல்வி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு