#annathanam #kanthuri திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில், நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக 2,500 கிலோ அரிசியில் நெய் சோறு தயாரிக்கப்பட்டது. பெரிய பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட நெய் சோறு, விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. மதம், இனம், வயது என எந்த வேறுபாடுமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்றனர்.