திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, தங்க மேரு வாகனததில், வீதிஉலா சென்ற பிச்சாண்டவர் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காணிக்கை அளித்து வழிபட்டனர். தொடர்ந்து, காந்திசிலை அருகே நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கண்காண பொதுமக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.