தமிழ்நாடு

"அண்ணா பல்கலையில் சமஸ்கிருதம் திணிப்பு" - ஸ்டாலின் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில், இந்திய - மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். மற்றொரு பதிவில், கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல் தமிழர்களின்- திராவிட பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். எனவே, பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர் கல்வித்துறையும் இந்த பண்பாட்டு ஆதிக்க பாடத்திட்டத்தை மாற்றிட வேண்டும் என்று, ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்