தமிழ்நாடு

ஆசிரியர்கள் கல்வி சான்றிதழ் விவகாரம் : "மார்ச் 16-க்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும்" - அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு

ஆசிரியர்கள் கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மார்ச் 16-க்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு

தந்தி டிவி

தங்கள் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பெற்றுள்ள பி.எச்.டி பட்டம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்குள் தனியார் பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் போலி பி.எச்.டி. சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போலி சான்றிதழ்கள், தவறான ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் ஆகியவற்றை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகள் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணியில் சேர்கின்ற போது, அவர்களின் சான்றிதழ் மற்றும் விவரங்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே , தங்கள் கல்லூரிகளில் பி.எச்..டி படித்துள்ள பேராசிரியர்கள் பெற்றுள்ள அந்த பட்டம் உண்மையானது என்பதற்கான தர சான்றிதழை, அண்ணா பல்கலைக் கழகத்திடம் வரும் மார்ச் 16-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்