தமிழ்நாடு

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

இருபத்தி இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நடப்பாண்டு, 535 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளன. இதன் மூலம் எஞ்சிய 22 தனியார் கல்லூரிகள் மூடப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனியார் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா, உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 92 கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதையும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும் அண்ணா பல்கலைக் கழகம் கண்டறிந்தது. இதையடுத்து, 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவின் கீழ் 15 ஆயிரம் இடங்களை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு, இந்த கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த, 122 எம்.இ., எம்.டெக்., போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி