சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடுதிகளை ஒப்படைக்கா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.