திருவண்ணாமலையில், அண்ணா சிலைக்கு திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலையில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, எ.வ.வேலு, கு.பிச்சாண்டி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
==