பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோர் திருமணம் முடிந்து சென்னை திரும்பினர்.
கடந்த 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த அனிருத் - காவியா தம்பதியினர், அங்கிருந்து காரில் தங்களது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.