தமிழ்நாடு

காதலை கைவிட்டதால் ஆத்திரம் - தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காதலன் மீட்பு

காதலை கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காதலியை கத்தியால் குத்திய காதலன் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

காதலை கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காதலியை கத்தியால் குத்திய காதலன் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள புத்தகரத்தை சேர்ந்த பிரேமலதா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருந்த சுதாகர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.ஆனால் சுதாகரின் நடவடிக்கைகள் பிரேமலதாவுக்கு ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போகவே அவரை விட்டு விலக திட்டமிட்டார். கடந்த சில நாட்களாக காதலனிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார் பிரேமலதா. இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர் காதலிக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் நேராக காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் சுதாகர். அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க பிரேமலதா வீட்டை விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த சுதாகர், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.தன்னிடம் பேச வேண்டும், காதலை தொடர வேண்டும் என அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பிரேமலதா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பிரேமலதா.உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றார் சுதாகர். காயம்பட்ட நிலையில் விழுந்து கிடந்த பிரேமலதாவை மீட்ட உறவினர்கள், உடனே அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காதலன் சுதாகரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மாதவரம் பகுதியில் உள்ள மின்சார கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் அவரின் சடலத்தை மீட்ட போது அது சுதாகர் என்பது உறுதியானது. காதலியை கொன்று விட்டோம் என நினைத்த காதலன், விசாரணைக்கு பயந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு