தமிழ்நாடு

"அங்கன்வாடி மையம் கட்டி முடித்தும் ஏன் திறக்கப்படவில்லை?" - பொதுமக்கள் கேள்வி

தந்தி டிவி

திருவண்ணாமலை காளசமுத்திரம் கிராமத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே கிராமத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்பதைப் போல் பரிதாபமாகக் காட்சியளிக்கும் நிலையில், சத்துணவு மளிகைப் பொருட்களையும் அங்கேயே வைத்து, குழந்தைகளுக்கும் அங்கேயே பாடம் எடுக்கப்பட்டு வருவது குழந்தைகளை வெகுவாக பாதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் எம்.எல்.ஏ சரவணனிடம் அங்கன்வாடி கட்டடத்தைத் திறக்க தேதி கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்