தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் நிலை நோய் பரவலை தடுக்க, அடுத்த 3 வாரங்களுக்கு இந்தியா முழுவதும் முழு அடைப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். முழு அடைப்பு காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய, மாநில அரசுகள் ஈடு செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.