Anbumani | PMK | தேர்தல் முடிந்த அடுத்த நாளே அன்புமணி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
#anbumaniramaodss #Anbumani #PMK #thanthitv
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ள 85.12 சதவீத வாக்குகள், திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பையே காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒரு அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாறு காணாத வாக்குப்பதிவு, ஆட்சி மாற்றத்திற்கான வாக்குகள் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளை அன்புமணி தெரிவித்துக் கொண்டார்.