சேலத்தைச் சேர்ந்த 85 வயதான பழனிச்சாமி என்ற முதியவர், வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே நடந்தே செல்வதை கவனித்த நெடுஞ்சாலை துறையினர், சுங்கச்சாவடியில் உள்ள உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் ஊழியர்கள் விசாரித்ததில், சென்னையில் இருந்து சேலத்திற்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாததால், கடந்த 3 நாட்களாக சுமார் 190 கிலோமீட்டர் நடந்து சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து முதியவருக்கு புத்தாடை மற்றும் வழிச்செலவுக்கு பணம் வழங்கிய ஊழியர்கள், சேலம் பேருந்தில் ஏற்றி அவரை வழியனுப்பி வைத்தனர்.