தமிழ்நாடு

மீண்டும் சூடு பிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - பின்னணியில் யார்..?

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு பண உதவி செய்தது யார்? கொலைக்கான காரணங்கள் போன்ற விவரம் வெளி வராத நிலையில், கைதிகளை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவசக்தி ஆகிய ஐந்து பேரை மீண்டும் 5 நாள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் ஆயுதப்படை மைதானத்தில் பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கியமாக தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோர் குறித்தும் ஐந்து பேரிடமும் தனித்தனியாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி