தமிழ்நாடு

அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துங்கள் - சுங்கத்துறைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் எங்கெங்கு உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை மணலியில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அறிக்கையில், 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வீடுகள் இல்லை என கூறியுள்ளதாகவும், ஆனால், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி 12 ஆயிரம் வீடுகள் உள்ளதாகவும், மாசுக் கட்டுபாட்டு வாரியம் கூறியுள்ளது. 700 மீட்டர் தூரத்தில் 7 ஆயிரம் குடியிருப்புகளும்,1500 மீட்டர் தொலைவில் 5 ஆயிரம் குடியிருப்புகளும் உள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே, உடனடியாக அம்மோனியம் நைட்ரேடை அப்புறப்படுத்துமாறு சுங்கத்துறை ஆணையருக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்