நீலகிரி மாவட்டம் குன்னூரில், அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிற்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுக நகர செயலாளர் உட்பட பலர் அதிமுகவில் இணைந்தனர். இன்று மீதமுள்ள அமமுக நிர்வாகிகளும், அதிமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில், கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர். இதனால், குன்னூரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.