தமிழ்நாடு

Amma Unavagam| CM விஜய்யின் முயற்சிக்கு வெற்றி - அம்மா உணவகங்களில் செம மாற்றம்.. குவியும் கூட்டம்

thanthitv

அம்மா உணவகங்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சென்னை முழுவதும் மொத்தம் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இடையில் இவற்றில் உணவின் தரம் குறைந்ததால், நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை எழுபதாயிரமாகக் குறைந்திருந்தது. இந்நிலையில், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தரமான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சுமார் பதினேழு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டன. தற்போது நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நான்காயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும், இதன் வழியாகப் பதினாறு கோடியே ஐம்பத்து மூன்று லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்