தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் அநாதையாக சுற்றித் திரிந்த அமெரிக்க பெண் மீட்பு

காஞ்சிபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க பெண்ணை போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தினர். அவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மேரி நெல்சன் என்பதும், வேளச்சேரியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விமல் என்பவரை ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. கணவன் - மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், மேரி நெல்சனுக்கு போதை பழக்கம் இருந்ததால் விமல் அவரை விட்டுவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த மேரி நெல்சன், வீட்டை விட்டு வெளியேறி சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து, மேரி நெல்சன் அமெரிக்க தூதகரத்தில் ஒப்படைக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்