கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்கு, திரைப்பட இயக்குநர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். அவரது குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி ஐம்பதாயிரம் ரூபாயை உதவியாக வழங்கினர். பொருளாதார வசதி படைத்தவர்கள், விவசாயியின் குடும்பத்திற்கு, ஆறுதல் வழங்கிட வேண்டும் என்றும், இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.