தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு இரும்பு பைப்பால் பயங்கர அடி - பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள்

தந்தி டிவி

சென்னை, சூளைமேடு அருகே தனியார் மருத்துவமனை வாகன ஓட்டுநரை தாக்கிய அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்...

சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் மருத்துவமனையில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ஆம் தேதி தனது நண்பர்களான வெள்ளை ராஜேஷ் மற்றும் வாட்டர் ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து சரவணம் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறில் சரவணனை மற்ற இருவரும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அன்றைய இரவு சூளைமேடு பஜனை கோவில் தெரு வழியாக சென்ற சரவணனை, இருவரும் இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பாஜக பகுதி செயலாளரான வாட்டர் ராஜேஷ் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்