தமிழ்நாடு

அமராவதி அணையிலிருந்து வரும் 26ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு

அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக வரும் 26ந் தேதி முதல் டிசம்பர் 24 ந்தேதி முடிய 120 நாட்களுக்கு 324 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்