தமிழ்நாடு

வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், விபரீத முடிவு - அதிர்ச்சி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த பட்டாணி விளையை சேர்ந்த தம்பதிதான் இவர்கள்...

சுரேஷ் - ஜெயஸ்ரீ ஆகிய இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தான் ஜெயஸ்ரீ கர்ப்பம் தரித்திருக்கிறார்...

இதில், மனைவிக்கு சொந்த பந்தங்களை அழைத்து பெரும் விமரிசையாக சீமந்தம் செய்து வைத்த சுரேஷ், இதன் மகிழ்ச்சி தணிவதற்குள் வீட்டை துக்க வீடாக மாற்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறார்..

வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், விபரீத முடிவு - அதிர்ச்சி வளைகாப்பு முடிந்த கையோடு மனைவியை அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து, வீட்டின் தனிமையில் இருந்திருக்கிறார் சுரேஷ்...

இந்த சூழலில், வெகுநேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்... உள்ளே சென்று பார்த்த போது சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

சீமந்தத்தில் மனைவியுடன் எடுத்த ரீல்ஸை பார்த்தபடியே தற்கொலை இந்த சம்பவத்தில், இறப்பதற்கு முன், மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அதன் இன்ஸ்டா பதிவுகளையும் பார்த்துக் கொண்டே உயிரை மாய்த்திருக்கிறார் சுரேஷ்...

கூடவே, கடைசியாக மர்மநபர் ஒருவருடன் சுரேஷ், வீடியோ காலில் பேசியிருப்பது தெரியவர, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்