தமிழ்நாடு

அலர்ட் மக்களே.. இந்த 5 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தந்தி டிவி

உலகக்கோப்பை தொடரில் வருகிற 8ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதேபோல, வரும் 13, 18, 23, 27ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்த ஐந்து நாட்களில், பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வரும் வாகனங்களும், போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்களும் திருப்பி விடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்