எண்ணூரில், அத்திப்பட்டு சேதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த மூட்டையில் 36 குவாட்டர் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை எண்ணூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர்கள் மாநகராட்சி ஊழியரின் ஆடையை அணிந்துகொண்டு வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் என தெரியவந்தது.
காசிமேட்டைச் சேர்ந்த வேங்கையன் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.