உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் களம் காண்டனர். வழக்கத்தை விட முன்னதாக காலை 7.30 மணிக்கே போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டதை வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கரவொலி எழுப்பி கண்டு ரசித்தனர்.