மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தலைமை காவலர் கண்ணன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவரது வீடு பூட்டி இருந்த நிலையில், தற்போது விசாரணைக்காக ஐந்து பேர் கொண்ட சிபிஐ குழு அங்கு சென்றது. கண்ணனின் கைபேசி கிடைக்காததால், அதைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டு, பின்னர் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு சென்றனர்.