தமிழ்நாடு

"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, அ.தி.மு.க அரசு 37 ஆயிரம் கோடி செலவு செய்தும், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துங்கள் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தி.மு.க ஆட்சி காலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் தான் 7 ஆயிரத்து 508 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் போது கூட, மக்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்