தமிழ்நாடு

"அதிமுக வெற்றியை உறுதி செய்யுங்கள்" - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை

அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் விழிப்புடன் பணியாற்றுமாறு, வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது

தந்தி டிவி
அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் விழிப்புடன் பணியாற்றுமாறு, வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையா உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும், பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒன்றாக உள்ளனவா என்பதை முகவர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் முகவர்கள், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியில் வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு