மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், அந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். யூஜிசி சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அதனை கலைக்க வேண்டாம் என்றும்,அதிமுக எம்.பி.வேணுகோபால் கோரிக்கை விடுத்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு நன்றி கூறிய அவர், கர்நாடக அரசு முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.