பிரதமர் நிவாரண நிதி மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை, முன்னாள் துணை சபாநாயகரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு மாத சம்பளம் தொகையான, ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 533 ரூபாயில், பிரதமர் நிவாரண நிதிக்கு 50 சதவீதமும், தமிழக முதல்வர் நிவாரண நிதி 50 சதவீதமும் வழங்குவதாக தெரிவித்தார்.