தமிழ்நாடு

அதிமுக MP சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

தந்தி டிவி

அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அ.தி.மு.க., எம்பி சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. தமிழ்நாடு அரசு, தி.மு.க, அதிமுக தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தது. இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றார். அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய நீதிபதி, அ.தி.மு.க எம்.பி சி.வி. சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவி்ட்டார். 

Chennai Traffic | சென்னையின் டிராபிக்கை பாதியாக குறைக்கும் `டபுள் டக்கர்’ பாலம் விரைவில்..

Breaking | Erode | TN Police | போலீசாரை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன கைதி | ஈரோட்டில் பரபரப்பு

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..