தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தந்தி டிவி

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைத்திட வேண்டும் என்றும் பதவி ஆசைக்காக அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சி மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கும் விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகள், மற்றும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருவதற்காகவும், கள்ளக்குறிச்சு, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களை உருவாக்கியதற்காகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி