தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரச்சார குழு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகிய 7பேர் உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்