"வார்டு உறுப்பினர் பதவி - விருப்பமனு அளிக்கலாம்" ! - அதிமுக தலைமை அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.