கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. வெங்கடாம்பேட்டையை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம், அதே கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பிரவீணாவின் கணவர் ராதாகிருஷ்ணன் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வம் காரில் சென்று கொண்டிருந்தபோது ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கினர். சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.