தமிழ்நாடு

பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு : கீழக்கமக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அ.தி.மு.க.வினர்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அ.தி.மு.க. வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அ.தி.மு.க. வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்வர்ராஜா எம்பி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், நேற்றிரவு கீழக்கரை பகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது ஒரு சிலர் பிரச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பி ஊருக்குள் வரக்கூடாது என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சாரம் செய்யாமல் அ.தி.மு.க. வினர் திரும்பிச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்