தமிழ்நாடு

"பொன்விழா ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி" - தொண்டர்களுக்கு கட்சி தலைமை அழைப்பு

பொன்விழா ஆண்டில், அ.தி.மு.க ஆட்சியே தொடர சபதம் ஏற்று சாதனை படைப்போம் என அக்கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தந்தி டிவி

அ.தி.மு.கவின் 49-வது தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ஒற்றுமை உணர்வு, திறன் மிகு உழைப்பால் அ.தி.மு.க அரசை பொறுப்புணர்வோடு கட்டி காத்து வருவதாக கூறியுள்ளனர். இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள், அ.தி.மு.க பொன்விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உடன்பிறப்புக்களாகிய நாம், தேர்தல் களத்தில் தொடர் வெற்றி பெற அயராது உழைப்போம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை, அ.தி.மு.க-வை கட்டிக்காத்த தலைவர்கள், தியாகிகளை நினைவுகூர்வோம் என இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்