திருச்சி, அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் உள்ள காளி கோயிலை, காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டன், தன்னுடன் தங்கியுள்ள மற்ற அகோரிகளுடன் சேர்ந்து தனது தயாருக்கு இறுதி சடங்குகள் செய்தார். அப்போது மணிகண்டன் மேரியின் உடலின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.