மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசுக்கு அறிக்கை தராதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் கூறிய விளக்கத்தை , சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.