பெலத்தூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா-விற்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளாவிற்கும் சூடாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற ஆட்டோ ஒட்டுநருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்நிலையில் பாகலூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபரோடு மஞ்சுளாவிற்கு நெருக்கம் ஏற்பட, ராஜாவுடனான கள்ளக்காதலை முறித்துக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா பெலத்தூர் தைல மரத்தோட்டத்தில் மஞ்சுளாவும் சுரேசும் தனிமையில் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். கையில் கத்தியுடன் இருந்த ராஜாவை கண்டதும் சுரேஷ் தப்பிஓட, மஞ்சுளாவை பிடித்து அவரது உடலில் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல் மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளார். மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த போலீசார் ராஜாவை உடனடியாக பிடித்து கைது செய்தனர்.